திருவாரூரை பூர்வீகமாக கொண்ட சித்த மருத்துவர் வெண்மதியன் (91) பெங்களூருவில் உள்ள அல்சூரில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். முறையாக சித்த மருத்துவம் பயின்ற இவர், கடந்த 62 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவத் துறையில் பணியாற்றி வந்தார். இம்ப்காப்ஸ் (Indian Medical Practitioners Co-Op Pharmacy & Stores) அமைப்பின் இயக்குநராகவும் பதவி வகித்தார்.
இந்நிலையில் வெண்மதியன் நேற்று முன்தினம் மாரடைப்பால் உயிரிழந்தார். அல்சூரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து வெண்மதியனின் உடல் லட்சுமிபுரத்தில் உள்ள இடுகாட்டில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.