பட்ஜெட்டுக்கு சிவசேனாவும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியதாவது:
பண மதிப்பு நீக்க நடவடிக் கையால் பாதிக்கப்பட்ட பொதுமக் களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை. முதலீடுகள் அதிகரித்திருப்பதாக அரசு தெரிவிக்கிறது. ஆனால் உண்மை என்னவென்றால் பண முதலைகள் யாரும் பண மதிப்பு நீக்க நடவடிக்கையில் சிக்கவில்லை. சாமான்ய மக்களின் பைகளில் இருந்து பணம் சுரண்டப்பட்டுள் ளது. கடந்த பட்ஜெட்டில் ஏன் பண மதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து தெரிவிக்கவில்லை. கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களே இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இந்த சூழலில் இந்த ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால் என்ன பயன்?
இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
பிஹார் முதல்வர் நிதிஷ்குமாரும், அவரது கூட்டணியில் உள்ள ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத்தும் இந்த பட்ஜெட் மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஏழைகள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.