சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் ஆதிக்கம் நிறைந்த தண்டேவாடா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 நக்சல் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
புர்கம் கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் சிஆர்பிஎப் மற்றும் மாநில போலீஸாரின் மாவட்ட ரிசர்வ் குழுவினர் இணைந்து அதிகாலை நேரத்தில் இந்த தாக்குதலை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து மூத்த போலீஸ் உயரதிகாரி கூறும்போது, ‘‘தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. 5 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர் களது சடலங்கள் மீட்கப்பட்டுள் ளன’’ என்றார். மாவட்ட ரிசர்வ் குழுவை சேர்ந்த இருவருக்கு காயம் ஏற்பட்டது. தொடர்ந்து சண்டை நீடிப்பதால் கூடுதல் படைகள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.