தேசிய பெண் குழந்தைகள் தினம் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 24-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் மோடி பதிவிட்டுள்ளதாவது:
''தேசிய பெண் குழந்தைகள் தினம் ஏராளமான துறைகளில் சிறந்து விளங்கி, நம்மைப் பெருமைப்படுத்தும் பெண் குழந்தைகளின் சாதனைகளைக் கொண்டாடும் விழா'' என்று மோடி கூறியுள்ளார்.
அதேபோல் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாடு தன் ட்விட்டர் பக்கத்தில், ''இந்த தேசிய பெண் குழந்தைகள் தினத்தில் நம் பெருமைமிகு பெண்களைக் கொண்டாடுவோம். பெண்களின் முன்னேற்றத்திலும் பாதுகாப்பிலும், நம்முடைய பங்கை அதிகப்படுத்துவோம்'' என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் ஏராளமான பாஜக தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் பொதுமக்கள் பெண் குழந்தைகள் தினத்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையொட்டி Beti Bachao Beti Padhao, National Girl Child Day உள்ளிட்ட ஹேஷ்டேகுகள் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகின்றன.