இந்தியா

புதிய இந்தியா உருவாகி வருகிறது: மோடி பெருமிதம்

பிடிஐ

புதிய இந்தியாவை உருவாக்க எனக்கு கைகொடுங்கள் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

உத்தரபிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்றுமுன்தினம் வெளியாகின. இதில் உத்தரபிரதேசத் தின் 403 தொகுதிகளில் பாஜக கூட்டணி 325 இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. உத்தரா கண்டின் 70 தொகுதிகளில் 57 இடங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றது.

பஞ்சாபில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றது. மணிப்பூர், கோவாவில் 2-வது பெரிய கட்சியாக பாஜக வெற்றி பெற்றுள்ளது. அந்த மாநிலங்களிலும் ஆட்சியமைக்க பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

பிரதமர் மோடி வெற்றி ஊர்வலம்

இந்நிலையில் உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களின் புதிய முதல்வர்களை தேர்வு செய்வது தொடர்பாக பாஜக ஆட்சி மன்றக் குழு டெல்லியில் நேற்று நடைபெற்றது.

இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தனது வீட்டில் இருந்து பாஜக தலைமை அலுவலகம் அமைந்துள்ள அசோகா சாலை வரை காரில் ஊர்வலமாகச் சென்றார். வழிநெடுக பாஜக தொண்டர்கள் குவிந்திருந்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர். தலைமை அலுவலகம் அருகே வந்தபோது காரில் இருந்து இறங்கிய மோடி தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கையசைத்தவாறு நடந்து சென்றார்.

முதல்கட்டமாக பிரதமர் மோடிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் மோடி பேசியதாவது:

இந்த நேரத்தில் தீன் தயாள் உபாயாத்யாயாவை நினைவு கூர்கிறேன். மூத்த தலைவர்கள் வாஜ்பாய், அத்வானி போன்றோர் கட்சியின் வளர்ச்சிக்காக விதைகளைத் தூவினார்கள். அதன்பயனை இப்போது அனுபவிக்கிறோம். சுமார் 4 தலைமுறைக்குப் பிறகு பாஜக மிகப் பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளது.

கட்சித் தலைவர் அமித் ஷாவின் வழிகாட்டுதலால் உலகம் முழுவதும் பாஜகவின் கொள்கைகள் பரவியுள்ளன. அவரது முயற்சியால் உலகிலேயே அதிக உறுப்பினர்களைக் கொண்ட மிகப்பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது.

ஆட்சி, அதிகாரம் என்பது வெறும் பதவிகள் அல்ல. மக்களுக்கு சேவை யாற்றுவதற்காக கிடைத்த வாய்ப்பு.

புதியதோர் இந்தியா உதயமா கிறது. அதற்காக இப்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. புதிய இந்தியா வைப் படைக்க எனக்கு கைகொடுங் கள். அந்த புதிய இந்தியாவில் பெண்கள், இளைஞர்களின் கனவுகள் நனவாகும், ஏழைகளின் வாழ்க்கை வளமாகும்.

வரும் 2022-ம் ஆண்டில் 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாட உள்ளோம். அந்த சுதந்திர தினம் இந்தியர்களுக்கு ஒரு மைல்கல்லாக அமையும். நாம் வளர்ச்சியை குறித்து மட்டுமே சிந்தித்தால் நமது கனவு கள் அனைத்தும் நிறைவேறும்.

ஏழைகளின் சக்தியை என்னால் உணர முடிகிறது. ஏழைகளின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தால் நாடு முன்னேறும். இப்போது நடுத்தர வர்க்க மக்கள் மீது சிறிது சுமை கூடியுள்ளது. ஏழைகள் முன்னேறிய பிறகு நடுத்தர வர்க்க மக்களின் சுமையும் பஞ்சாகப் பறந்து போகும். ஏழைகளும் நடுத்தர மக்களும் இணைந்து இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லலாம்.

125 கோடி இந்தியர்களின் முன் னேற்றத்துக்காக நான் தொடர்ந்து பாடுபடுவேன். நாட்டின் வளர்ச்சிக்காக அனைத்து கட்சிகளுமே பாடுபட் டுள்ளன. அவர்களின் பங்களிப்பை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT