இந்தியா

காஷ்மீரில் தீவிரவாதிகள் சுற்றிவளைப்பு: கடும் துப்பாக்கிச் சூடு

செய்திப்பிரிவு

காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதிகளை சுற்றிவளைத்து பாதுகாப்புப் படையினர் கடும் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர்.

குப்வாரா மாவட்டம் குணாபதார் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர்.

தொடர்ந்து கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுவருகிறது.

SCROLL FOR NEXT