இந்தியா

ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்றம்

பிடிஐ

ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் கொல்கத்தா பிரஸிடென்சி சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

உடல்நிலை குன்றியதன் காரணமாக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது உடல்நிலை தேறியதையடுத்து அவர் சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கர்ணன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டாலும் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஒரு மாதத்துக்கும் மேலாக தலைமறைவாக இருந்த கொல்கத்தா உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன், கோவையில் கடந்த 20-ம் தேதி கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் கொல்கத்தா அழைத்துச் செல்லப்பட்டார். கடந்த 22-ம் தேதி அவர் நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறினார்.

இதனையடுத்து அவர் எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT