மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் மரணத்துக்கு ஓவர்டோஸ் மருந்து காரணமாக இருக்கலாம் என்று அவரது உடலை பரிசோதனை செய்த எம்ய்ஸ் மருத்துவர்கள் கூறியுள்ளதாக தெரியவந்துள்ளது.
சுனந்தாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கை, சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் அலோக் ஷர்மாவிடம் நேற்று மாலை தாக்கல் செய்யப்பட்டது.
இதில் இத்தகவல் கூறப்பட்டுள்ளதாக எய்ம்ஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இதனி டையே இவ்வழக்கு விசா ரணையை துரிதப்படுத்து மாறு டெல்லி போலீஸாரிடம் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கேட்டுக் கொண்டுள்ளார்.