இந்தியா

5 நாள் பயணமாக இமாச்சலுக்கு சென்றார் பிரணாப்

பிடிஐ

குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, ஓய்வு எடுப்பதற்காக இமாச் சலப் பிரதேச மாநிலம் மஷோப்ரா நகருக்கு நேற்று சென்றார்.

முன்னதாக, சரப்ரா என்ற இடத் தில் ஹெலிகாப்டரில் வந்திறங்கிய பிரணாபை, மாநில முதல்வர் வீரபத்ர சிங், ஆளுநர் ஆச்சார்யா தேவவிரத், அமைச்சர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் வரவேற்றார்.

அங்கிருந்து சிம்லா மாவட்டத் தில் உள்ள மஷோப்ராவில் உள்ள குடியரசுத்தலைவரின் இல்லத் துக்கு தனது மகள் ஷர்மிஸ்தாவுடன் வந்த பிரணாபுக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப் பட்டது.

SCROLL FOR NEXT