காஷ்மீரில் 10 மாவட்டங்களில் தடையுத்தரவு நேற்றும் நீடித்தது. நாளை வரை தடை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி புர்ஹான் வானி கடந்த 8-ம் தேதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து காஷ்மீரில் வன்முறை வெடித்தது. இதில், இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர். 3,400-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். ஆங் காங்கே கல்வீச்சு நடந்தது.
இதையடுத்து, காஷ்மீரின் 10 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள் ளது. “ஊரடங்கு உத்தரவு தொடர் கிறது. பிரிவினைவாதிகள் கருப்பு நாளாக அனுஷ்டிக்க அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு படையினரும், காவல் துறையினும் கூடுதல் விழிப்புணர்வுடன் தடை உத்தரவை கடுமையாக அமல் படுத்தி வருகின்றனர். கடந்த 8-ம் தேதிக்குப் பிறகு, நேற்று முன் தினம் அமைதியான நாளாகக் கழிந்தது. புல்வாமா, அனந்நாக், கண்டர்பால் மாவட்டங்களில் சில இடங்களில் சிறிய அளவில் கல் வீசித் தாக்கும் போராட்டம் நடை பெற்றது. எனினும், பொதுவாக அமைதியான நாளாகவே கழிந்தது. நாளை (வெள்ளிக்கிழமை) வரை தடையுத்தரவு நீட்டிக்கப்பட்டுள் ளது” என காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.