காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு, பாஜகவின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று ட்விட்டரில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு இன்று வயது 67. தென் ஆப்பிரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் மறைவையொட்டி, அவரது பிறந்தநாள் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.
நெல்சன் மண்டேலாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், நாடு முழுவதும் கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து 5 நாட்களுக்கு இந்திய அரசு துக்கம் அனுசரித்து வருவது குறிப்பிடத்தக்கது.