இந்தியா

பி.எஃப். வட்டி விகிதம் 8.75% ஆக உயர்வு

செய்திப்பிரிவு

2013-14-ம் நிதியாண்டுக்கு வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதத்தை 8.75 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதனால் சுமார் 5 கோடி பேர் பலனடைவார்கள்.

முன்னதாக, 2013-14-ம் ஆண்டுக்கு வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 8.75 சதவீதமாக உயர்த்தி வழங்கலாம் என மத்திய அரசுக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இ.பி.எஃப்.ஓ) பரிந்துரைத்தது.

2012-13-ம் நிதியாண்டுக்கு 8.5 சதவீத வட்டி விகிதம் வழங்கப்பட்ட நிலையில், இ.பி.எஃப்.ஓ.விடம் உபரி நிதி இருப்பதால், தற்போது 0.25 சதவீதம் உயர்த்த முன் வந்தது. எனினும், மக்களவை தேர்தலையொட்டி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இ.பி.எஃப்.ஓ.வின் பரிந்துரைக்கு மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்த நிலையில், சந்தாதாரர்களின் கணக்கில் புதிய விகிதத்தில் வட்டி வரவு வைக்கப்படும்.

SCROLL FOR NEXT