கேரளாவில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வெற்றியை கொண்டாடிய 23 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
லண்டனில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில், பாகிஸ்தான் வெற்றியை கொண் டாடியதாக, ரசாக், மசூத், சிராஜ் மற்றும் 20 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள் ளது. உள்ளூர் பாஜக தலைவர் ராஜேஷ் ஷெட்டி அளித்த புகாரின் பேரில் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “பட்டாசு வெடித் தும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஆதரவாக கோஷ மிட்டும் இவர்கள் கொண்டாட்டத் தில் ஈடுபட்டனர். இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் இவர்கள் மீது, சட்டவிரோதமாக கூடுதல், வன்முறையில் ஈடுபடுதல், வெடிபொருட்களை அஜாக்கிரதையாக கையாளுதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது வரை யாரும் கைது செய்யப்பட வில்லை. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது” என்றனர்.