மாநிலங்களவை மற்றும் சட்டமேலவை தேர்தலுக்காக பிஹாரில் முன்னிறுத்தப்பட்ட அனைத்து வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.
பிஹாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் முன்னாள் தலைவர் சரத் யாதவ், ஆர்.சி.சிங், ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் அக்கட்சியின் தலைவரான லாலு பிரசாத்தின் மகள் மிசா பாரதி, மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி மற்றும் பாஜக சார்பில் மூத்த தலைவர் கோபால் நாராயண் சிங் ஆகியோர் மாநிலங்களவை தேர்தலுக்காக முன்னிறுத்தப்பட்டனர். இந்த 5 வேட் பாளர்களை தவிர, வேறு யாரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன் னிறுத்தப்படவில்லை. இதை யடுத்து 5 பேரும் போட்டியின்றி மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக் கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள் ளது. இதே போல் பிஹாரின் சட்டமேலவைக்கு முன்னிறுத்தப்பட்ட மகா கூட்டணி மற்றும் பாஜக கட்சிகளை சேர்ந்த 7 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.