முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு, பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அப்துல் கலாம் இன்று தனது 83-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். அவருக்கு இறைவன் நல்ல ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் வழங்கட்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
ஏவுகணை மனிதர் (Missile Man) என அழைக்கப்படும் அப்துல் கலாம், இந்திய ஏவுகணை மேம்பாட்டுத் திட்டத்தில் பெரும் பங்காற்றியவராவார்.