இந்தியா

காஷ்மீரில் 13-வது நாளாக ஊரடங்கு உத்தரவு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஐஏஎன்எஸ்

காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து 13-வது நாளாக பாதிக்கப்பட்டுள்ளது, ஊரடங்கு உத்தரவும் 13-வது நாளாக அமலில் இருந்து வருகிறது.

சையத் அலி ஷா கிலானி, மிர்வைஸ் உமர் ஃபரூக், யாசின் மாலிக் ஆகியோர் அழைப்பு விடுத்திருந்த கடையடைப்பு, போராட்டம் காரணமாக வியாழனன்றும் ஊரடங்கு உத்தரவு ரத்து செய்யப் படமுடியாத நிலை காஷ்மீர் மாநிலத்தில் நிலவுகிறது.

கந்தேர்பால், பாத்கம், பாந்திபுரா, மற்றும் பாரமுல்லா மாவட்டங்களில் பள்ளிகளைத் திறக்க மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு அடையாள அட்டை அவசியமாக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பத்திரிகைகள் இன்று வெளியாகின.

பத்திரிகைகளை நிறுத்தி வைத்ததற்காக மெஹ்பூபா முப்தி வருத்தம் தெரிவித்ததையடுத்து அவரைச் பத்திரிகையாசிரியர்கள் சந்தித்த பிறகு மீண்டும் பத்திரிகைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

ஆர்பாட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்குமான மோதல்கள் பெரும்பாலும் இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் மெஜ்பூபா அழைப்பு விடுத்திருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை புறக்கணிக்கப்போவதாக தேசிய மாநாட்டுக் கட்சி தெரிவித்துள்ளது.

புர்ஹான் வானி என்கவுண்டரில் கொல்லப்பட்டதையடுத்து கடந்த ஜூலை 9-ம் தேதி தொடங்கிய வன்முறைக்கு 2 போலீஸார் உட்பட 45 பேர் பலியாகியுள்ளனர்.

SCROLL FOR NEXT