இந்தியாவின் பிரம்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் பிரம்மோஸ் ஏவுகணை சோதனை செய்யப்பட்டது.
இந்த ஏவுகணை, 290 கி.மீ. தூரம் பாய்ந்து சென்று இலக்கை ஆழமாக தாக்கும் திறன் பெற்றது. இது பாய்ந்து செல்லும் வேகம் 2.8 மேக்- ஆகும். 300 கிலோ எடையுள்ள வெடிப்பொருளை ஏந்திச்செல்லும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
லெப்டிணன்ட் ஜெனரல் அமித் சர்மா மேற்பார்வையில் இந்த சோதனை நடைபெற்றது.இந்த ஏவுகணையை நிலம், கடல் மட்டம், ஆகாயம், கடலுக்கு அடியில் என பல்வேறு தளங்களில் இருந்தும் ஏவலாம்.
ராணுவமும், கடற்படையும் ஏற்கெனவே இந்த ஏவுகணையை தங்களுடன் இணைத்துக் கொண்டுள்ள நிலையில், விரைவில் விமனப்படையிலும் இந்த ஏவுகணை சேர்க்கப்பட உள்ளது.