இந்தியா

மாநிலங்களவைத் தேர்தலில் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி போட்டி

செய்திப்பிரிவு

மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலில் பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி திரிணமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.

இதனை அக்கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி ஃபேஸ்புக் இணையதளத்தில் நேற்று அறிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியது: இந்தமுறை மேற்கு வங்கத்தில் இருந்து 5 உறுப்பினர்கள் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இதில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் ஓர் இடம் மிதுன் சக்கரவர்த்திக்கு வழங்கப்படுகிறது என்று மம்தா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

மிதுன் சக்கரவர்த்தி திரையுலகில் மிகவும் பிரபலமானவர். கலைக்காகவும், சமூக சேவைக்காகவும் தனது வாழ்வை அர்பணித்துக் கொண்டவர். அவர் மேற்கு வங்கத்துக்கு மட்டுமல்ல நமது நாட்டுக்கே மிகப்பெரிய சொத்து. எனவே அவரை எங்கள் கட்சி சார்பில் மாநிலங்களவைக்கு அனுப்புவதில் பெருமையடைகிறேன் என்றும் மம்தா கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் பிப்ரவரி 7-ல் மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

SCROLL FOR NEXT