குஜராத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களைச் சந்தித்துப் பேசி வருகிறார்.
இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. விக்ரம் மடம் கூறியதாவது: கட்சி நிர்வாகிகள், தொண்டர்களைச் சந்தித்து ராகுல் பேசி வருகிறார். செளராஷ்டிரம், ஆமதாபாத் உள்ளிட்ட பகுதிகளில் அவர் கட்சியி னரிடையே பேசினார். அப்போது, '2014 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்தலைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. அது ஒன்றும் வாழ்வா சாவா போராட்டம் அல்ல. அந்த தேர்தலுக்குப் பிறகும் கட்சி இருக்கும். காங்கிரஸ் நிரந்தரமான அரசியல் கட்சி. நமது பலவீனங்களிலிருந்து மீண்டு, நமது பலத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
தேர்தலைப் பற்றியே நினைத்துக் கொண்டிராமல், மக்களுக்குச் சேவை செய்யுங்கள். தகவல் பெறும் உரிமைச் சட்டம் உள்பட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். ஆட்சியதி காரம் சார்ந்த கட்சியாக நாம் இருக்கக்கூடாது. ஆட்சியில் இல்லாத போதும் காங்கிரஸ் கட்சி யால் மக்களுக்கு சேவை செய்ய முடியும். குஜராத்தில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த வேண்டும்' என அவர் பேசினார் என்றார்.
"ராகுலின் வருகை காங்கிரஸ் கட்சியினரிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது" என காங்கிரஸ் மாநிலதலைவர் அர்ஜுன் மோத் வாடியா தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் ராகுல் காந்தி பங்கேற்ற கட்சி நிகழ்ச்சிகளில் செய்தி யாளர்களுக்கு அனுமதி மறுக்கப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.