இந்தியா

டெல்லியில் புதிய ஆட்சி: ஆளுநரின் நடவடிக்கையில் உச்ச நீதிமன்றம் திருப்தி

செய்திப்பிரிவு

டெல்லியில் புதிய ஆட்சி அமைவதற்கான, துணைநிலை ஆளுநரின் நடவடிக்கைகள் திருப்தியளிக்கிறது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், வெளியிலிருந்து ஆதரவுடன் சிறுபான்மை அரசு அமைவதற்காக கூடுதல் அவகாசம் அளிக்கப்பட வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

ஆம் ஆத்மி சார்பில், டெல்லி சட்டப்பேரவையைக் கலைக்கக் கோரி பிரஷாந்த் பூஷண் மனு தாக்கல் செய்துள்ளார்.

இவ்வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையில் நீதிபதிகள் ஜே.செலமேஸ்வர், ஏ.கே.சிக்ரி, ஆர்.கே.அகர்வால், அருண் மிஸ்ரா ஆகியோரடங்கிய அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ‘பத்திரிகை களில் நாங்கள் படித்ததன் அடிப் படையில், துணைநிலை ஆளுநர் சாதகமான நடவடிக்கைகளைத் தொடங்கியிருப்பதாகக் கருதுகி றோம்’ எனத் தெரிவித்தனர்.

மேலும், “அரசியல் கட்சிகளு டன் இதுதொடர்பாக துணைநிலை ஆளுநர் ஆலோசனையைத் தொடங்கியுள்ளதால், மனுதாரர் சிறிது காலம் காத்திருக்க வேண்டும். ஆட்சியமைவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக துணை ஆளுநர் கருதினால், அவருக்கு கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும். அங்கு, அரசியல் மாறுபாடுகளைக் கடந்து, வெளியிலிருந்து ஆதரவு மூலம் சிறுபான்மை அரசு அமையலாம் ” என நீதிபதிகள் தெரிவித்தனர்.

அப்போது பிரசாந்த் பூஷண், “டெல்லியில் நிலவும் அரசியல் சூழலைப் பார்த்தால் அங்கு புதிய அரசு அமைவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை” என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி கள், “நாம் எப்போதும் நம்பிக்கை யுடனே வாழ வேண்டும். வழக்கு விசாரணை வரும் நவம்பர் 11-ம் தேதி வரை ஒத்தி வைக்கப் படுகிறது. அதுவரை மனுதாரர் காத்திருக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.

துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் புதிய ஆட்சி அமைப்பதற் கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆலோசிக்க கட்சிகளுக்கு அழைப்பு விடுக்க முடிவு செய்துள்ளார்.

மொத்தம் 70 உறுப்பினர் களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையில், 3 தொகுதிகள் காலியாக உள்ளன. இதையடுத்து ஆட்சியமைக்க 34 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை.

கடந்த டிசம்பரில் நடைபெற்ற தேர்தலில், பாஜக 31 இடங்களில் வெற்றி பெற்றது. அதன் கூட்டணிக் கட்சியான அகாலி தளம் ஒரு இடத்தில் வெற்றி பெற்றிருந்தது.

ஆனால், எம்எல்ஏக்களாக இருந்த ஹர்ஷ்வர்தன், ரமேஷ் பிதூரி, பர்வேஸ் வர்மா ஆகியோர் எம்.பி.யாக வெற்றி பெற்றுள்ளதால், பாஜக தரப்பில் 28 எம்எல்ஏக்களே உள்ளனர்.

இரண்டாவது பெரிய கட்சியான ஆம் ஆத்மியில் தற்போது 27 எம்எல்ஏக்கள் உள்ளனர். எம்எல்ஏ வினோத் குமார் பென்னி கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டார்.

SCROLL FOR NEXT