இந்தியா

லாலு பிரசாத் யாதவ் ஜாமீன் மனு நிராகரிப்பு

செய்திப்பிரிவு

கால்நடை தீவன ஊழல் வழக்கில் கைதான லாலுபிரசாத் யாதவ் ஜாமீன் மனுவை ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலுவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, ராஞ்சி சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், லாலு பிரசாத் யாதவ் தரப்பில் ஜாமீன் கோரி ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அவரது ஜாமீன் மனு மீதான இருதரப்பு வாதம் முடிவடைந்ததையடுத்து, நீதிபதி ஆர்.ஆர்.பிரசாத், மனு மீதான தீர்ப்பை இன்றைக்கு (வியாழக்கிழமைக்கு) ஒத்திவைத்தார்.ஆனால், இன்று நீதிமன்றம் கூடியவுடன் ஜாமீன் மனுவை நிராகரிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற பிகார் முன்னாள் முதல்வரான ஜகன்னாத் மிஸ்ராவுக்கு ஏற்கெனவே ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வழக்கில் மொத்தம் 43 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT