ராஷ்டிரிய ஜனதா தள கட்சியுடனான காங்கிரஸ் கட்சியின் நட்பு நீடிக்கும் என அக்கட்சியின் பொது செயலாளர் திக் விஜய் சிங் தெரிவித்துள்ளார்.
கால்நடை தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு பீகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் லாலு பிரசாத் யாதவ். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திக் விஜய் சிங் : லாலு தான் குற்றமற்றவர் என்பதை மேல் கோர்ட்டில் நிரூபிப்பார். கால்நடை தீவன ஊழல் வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பால் லாலுவின் கட்சியுடனான நட்பில் எவ்வித பிளவும் ஏற்படாது என்றார்.
கர்நாடக மாநிலம் மாண்டியாவில் நடைபெறவிருக்கும் பொது கூட்டத்தில் பங்கேற்க வந்த திக்விஜய்சிங் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.