இந்தியா

தனி மனித உரிமை பாதுகாக்கப்படும்: சிபல் நம்பிக்கை

செய்திப்பிரிவு

ஓரினச் சேர்க்கை விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதால் தனி மனித உரிமை பாதுகாக்கப்படும் என தான் நம்புவதாக மத்திய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம் என்ற தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று(வெள்ளிக் கிழமை) மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

இது குறித்து கபில் சிபல் தனது டவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள கருத்தில், உச்ச நீதிமன்றத்தில் சட்டப் பிரிவு 377-ஐ மறுசீராய்வு செய்ய அரசு மனு செய்துள்ளது. இதனால் தனி மனித உரிமை பாதுகாக்கப்படும் என நம்புவோம் என குறிப்பிட்டுள்ளார்.

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது சட்டப்படி குற்றத்துக்குரிய செயல் என்று டிசம்பர் 11-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து எதிர்ப்பு அலைகள் எழுப்பிய போது, இந்த உத்தரவில் கால தாமதம் இன்றி விரைவில் மாற்றம் செய்யப்பட வேண்டும். இதற்கான அனைத்து முயறிசிகளையும் அரசு எடுக்கும் என கூறியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

          
SCROLL FOR NEXT