ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், குப்பம் அருகே உள்ள வி. கோட்டா மண்டலம், நாகி ரெட்டிபல்லி வனப்பகுதி யில் ஒரு யானை இறந்து கிடப்பதாக, அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, வன ஊழியர் கள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். கர்ப்பமாக இருந்த இந்த யானை, பிரசவ வலி தாங்காமல் 5 நாட் களுக்கு முன்பு இறந்திருக்க லாம் என வன ஊழியர் கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து கால்நடை மருத்து வர்கள் வரவழைக்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் சம்பவ இடத்திலேயே உடல் புதைக்கப்பட்டது.