இந்தியா

டி.பி. சந்திரசேகரன் கொலைவழக்கு தீர்ப்பு: 12 பேர் குற்றவாளிகள்

செய்திப்பிரிவு

கேரளத்தில் கடந்த 2012-ம் ஆண்டு கொலைசெய்யப்பட்ட புரட்சிகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சந்திரசேகரன் கொலை வழக்கில் 12 பேர் குற்றவாளிகள் என கோழிக்கோடு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை விவரங்கள் வியாழக்கிழமை அறிவிக்கப்படவுள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.பி. சந்திரசேகரன், அக்கட்சியிலிருந் விலகி புரட்சிகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கினார்.

இந்நிலையில் 2012 மே மாதம் 4-ம் தேதி, கோழிக்கோடு மாவட்டம் வடகரா அருகே ஒஞ்சியத்தில் ஒரு கும்பலால் அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

அரசியல் பழிவாங்கல் காரணமாகவே இக்கொலை நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன், இக்கொலையின் பின்னணியில் மார்க்சிஸ்ட் கட்சி இருக்கக் கூடும் என்ற சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார்.

இது கேரளத்தில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT