இந்தியா

தேசிய மலர் என்பதால் பாஜக தாமரை சின்னத்தை முடக்க கோரி பொதுநல மனு

பிடிஐ

தேசிய மலரான தாமரையை பாரதிய ஜனதா கட்சி, கட்சியின் அடையாளமாகவும், தேர்தல் சின்னமாகவும் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஹேமந்த் பாட்டில் என்பவர் இந்த பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார்.

தாமரை மலர் புனிதமானது. அது இந்தியக் கலாச்சாரத்தின் மங்களகரமான சின்னமாகும். கடவுள் லட்சமியின் மலராகவும், செல்வம், வளமை, பெருக்கத்தின் குறியீடாகவும் உள்ளது.

இந்த மலரை பாஜக தேர்தல் காரணங்களுக்காக பயன் படுத்துவது சின்னங்கள் மற்றும் முத்திரைகள் (தவறாக பயன்படுத் துதலை தடுத்தல்) சட்டம்-1950ன் கீழ் சட்டவிரோதமானது. எனவே, பாஜகவின் சின்னமாக அதனைப் பயன்படுத்த முடியாத வகையில் நீக்க வேண்டும். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு உத்தர விட வேண்டும் என மனுவில் தெரி விக்கப்பட்டுள்ளது.

இம்மனு அடுத்த வாரம் விசா ரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

SCROLL FOR NEXT