இந்தியா

பயிற்சி வழக்கறிஞர் பாலியல் புகார்: விசாரணை அறிக்கை தாக்கல்

செய்திப்பிரிவு

உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் தன்னிடம் பாலியல் ரீதியில் தகாத முறையில் நடந்து கொண்டார் என பெண் பயிற்சி வழக்குறிஞர் ஒருவர் அண்மையில் புகார் கூறியிருந்தார்.

இந்த புகார் பற்றி ஆராய நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, எச்.எல்.தத்து, ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகிய 3 பேர் கொண்ட குழு கடந்த 12-ஆம் தேதியன்று அமைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்தக் குழு இன்று தனது விசாரணை அறிக்கையை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவத்திடம் தாக்கல் செய்தது.

முன்னதாக இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சதாசிவம், பாலியல் முறைகேடு தொடர்பான புகார்களை லேசில் விட்டுவிடமுடியாது. நீதித்துறையின் தலைவர் என்கிற முறையில் இந்த விவகாரம் எனது மனதை உலுக்கியுள்ளது என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT