அன்னை தெரசாவுக்கு வாடிகனில் வரும் செப்டம்பர் 4-ம் தேதி புனிதத்துவ விழா நடைபெறுவதை யொட்டி சிறப்பு தபால் அட்டை, நாணயம் வெளியிடப்படவுள்ளது.
இது குறித்து பிரபல நாணய வியல் மற்றும் தபால் தலை சேகரிப்பாளருமான அலோக் கே. கோயல் கூறும்போது, ‘‘அன்னை தெரசாவின் நூற்றாண்டு தின கொண்டாட்டத்தை முன்னிட்டு கடந்த 2010-ல் மத்திய அரசு அவரது உருவம் பொறித்த 5 ரூபாய் நாணயத்தை வெளியிட்டது. அந்த நாணயத்தின் வடிவத்தை கொண்டு சிறப்பு தபால் அட்டையும், தபால் தலையும் உருவாக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 2-ம் தேதி வெளியிடப் படவுள்ளது’’ என்றார்.
இந்திய தபால் துறை இந்த சிறப்பு தபால் அட்டைக்கான முகப்பை தூய பட்டில் உருவாக்கி யுள்ளது. இதே போல் அன்னை தெரசாவின் சிலையும் கொல்கத்தா வில் திறந்து வைக்கப்படவுள்ளது. 1910-ல் அன்னை தெரசா பிறந்த மக்கடோனியக் குடியரசு நாடும் அவரைக் கவுரவிக்கும் வகையில் தங்க மூலாம் பூசப்பட்ட சிறப்பு வெள்ளி நாயணத்தை வெளியிடு கிறது. மொத்தம் 5,000 நாணயங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 50 மட்டும் இந்திய சந்தையில் விற்பனைக்கு வருகிறது.