இந்தியா

திருப்பதி கோயிலில் லட்டு விநியோகம் நிறுத்தம்: பக்தர்கள் கொந்தளிப்பு

செய்திப்பிரிவு

திருப்பதியில் லட்டு பிரசாத விநியோகம் சில மணிநேரம் நிறுத்தப்பட்டதாலும், கள்ளத் தனமாக லட்டு விற்பனை நடைபெற்றதாலும் பக்தர் கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அறங்காவலர் குழு உறுப்பினரி டம் புகார் செய்தனர்.

திருப்பதி திருமலை ஏழு மலையான் கோயிலில் வழங்கப் படும் லட்டு பிரசாதம் பிரபல மானது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் லட்டு வாங்குவதற் காக ஆர்வமாக இருக்கின்றனர்.

இந்நிலையில் திருமலை யில் நேற்று காலை திடீரென லட்டு தட்டுப்பாடு நிலவியதால், சில மணி நேரம் விநியோகம் நிறுத்தப் பட்டது. இதனால் லட்டு பிரசாதம் வாங்க வரிசையில் காத் திருந்த ஏராளமான பக்தர்கள் ஆத்திரமடைந்து ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.

அதேசமயத்தில் சில புரோக் கர்கள் அதிக விலைக்கு லட்டு விற்பதாகவும், லட்டு விநி யோகம் நிறுத்தப்பட்டதால் தான் கள்ளத்தனமாக லட்டு விற்பனை செய்யப்படுகிறது என்றும் பக்தர்கள் கொந்த ளித்தனர். அந்த சமயத்தில் கோயிலுக்கு வந்த அறங் காவலர் குழு உறுப்பினர் பானுபிரகாஷ் ரெட்டியிடம் பக்தர்கள் இதுகுறித்து புகார் கூறினர். உடனடியாக அவர் லட்டு விநியோக மையத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். பின்னர் வழக்கம்போல் லட்டு விநியோகம் தொடங்கப்பட்டது.

SCROLL FOR NEXT