இந்தியா

சிங்கப்பூரில் 13 இந்தியர்களுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு

ராய்ட்டர்ஸ்

சிங்கப்பூரில் 13 இந்தியர்களுக்கு ஜிகா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் உறுதிப்படுத்தியுள்ளார்.

சிங்கப்பூரில் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் பணியாற்றுவோர் மத்தியில் ஜிகா வைரஸ் தாக்கம் இருப்பதாக கண்டறியப்பட்டது.

இந்நிலையில் அங்குள்ள இந்தியர்களில் 13 பேர் ஜிகாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு விகாஸ் ஸ்வரூப் அளித்த பேட்டியில், "சிங்கப்பூரில் இந்தியர்கள் 13 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்திருக்கிறது" என்றார்.

கருவுற்ற தாய்மார்களுக்கு ஜிகா பாதிப்பு ஏற்பட்டால் கருவில் இருக்கும் குழந்தைக்கு மைக்ரோசெபாலி என்ற சிறிய தலை நோய் ஏற்படும்.

மேலும் வாழ்நாள் முழுவதும் அக்குழந்தைக்கு அடுக்கடுக்கான பாதிப்பு ஏற்படும் என அமெரிக்க மருத்துவ ஆய்வு மையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT