கர்நாடக முதல்வர் சித்தராமையா பாராபட்சமாக நடந்து கொள்வதால் உடனடியாக அவரை மாற்ற வேண்டும் எனக் கோரி 20-க்கும் மேற்பட்ட கர்நாடக மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்டு காங்கிரஸ் மேலிடத்திற்கு கடிதம் அனுப்பியிருப்பதாக தெரிய வந்துள்ளது.
சித்தராமையா முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட போதே காங்கிரஸ் கட்சியில் பல எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி தெரிவித்தனர். ''வேறு கட்சியில் இருந்து வந்தவருக்கு முதல்வர் பதவி தரக்கூடாது'' என 50-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியதால், காங்கிரஸ் கட்சி மேலிடம் அம்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பரமேஷ்வரின் தலைமையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அடங்கிய ''ஒருங்கிணைப்பு குழு'' ஒன்றை உருவாக்கியது.இந்த குழுவை பரிசீலிக்காமல் சித்தராமையா எந்த முடிவையும் அறிவிக்கக் கூடாது'' என அறிவுறுத்தப்பட்டது.
‘‘வெறுமனே அரசு எந்திரத்தை மாற்றுவதை மட்டுமே சித்தராமையா தொடர்ந்து சாதனையாக செய்து கொண்டிருக்கிறார். கட்சி மேலிடம் உடனடியாக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை கூட்டி,சித்தராமையா மீதும்,அவரது அமைச்சரவை மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மீண்டும் மீண்டும் அதிகாரிகளை சித்தராமையா இடமாற்றம் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் கர்நாடக முதல்வர் சித்தராமையாவிற்கு எதிராக, காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும் கர்நாடக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளருமான திக்விஜய் சிங்கிற்கு சில தினங்களுக்கு முன்பு கடிதம் அனுப்பியுள்ளனர். அந்தக் கடிதத்தில்,
அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் கடிதம் குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் புதன்கிழமை செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது,
‘‘முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து மிகவும் நேர்மையுடன் மக்கள் நலப்பணிகளை செயல்படுத்தி வருகிறேன். ஊடகங்களில் வெளி யாகி இருக்கும் அந்த கடிதம் குறித்து பதில் சொல்ல முடியாது''என தெரிவித்தார்.
இந்நிலையில் செய்தியாளர் களை சந்தித்த கர்நாடக மாநில எதிர்கட்சி தலைவர் குமார சாமி, 'சித்தராமையா விரைவில் ஆட்சியை இழப்பார். சாம்ராஜ் நகருக்குள் அவர் அடியெடுத்து வைத்தது அவரது பதவியை காவு வாங்காவிட்டாலும், காங்கிரஸ் கட்சிக்காரர்களே அவரது பதவியை காவு வாங்குவார்கள்''என்றார்.