பிஹாரில் செவ்வாய்கிழமை முதல் தென்மேற்கு பருவமழை தீவிர மடைந்து வருகிறது. இதன் காரண மாக அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், நாலந்தா, அவுரங்கபாத், ரோதாஸ், புர்னியா ஆகிய மாவட்டங்களில் திடீரென மின்னல் தாக்கியதில் 55 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என பேரிடர் மேலாண்மை துறையின் முதன்மை செயலர் வியாஸ்ஜி தெரிவித்துள் ளார். பெரும்பாலும் கிராமப் பகுதி களில் தான் உயிர் சேதம் அதிக அளவில் நிகழ்ந்திருப்பதாக கூறப் படுகிறது.
இது குறித்து பிஹார் மாநில பேரிடர் மேலாண்மையின் மூத்த அதிகாரி அனிருத் குமார் கூறும் போது, ‘‘மின்னல் தாக்கியதில் 55 பேர் உயிரிழந்திருப்பது உறுதியாகி யுள்ளது. பல கிராமங்களில் மின்னல் தாக்கிய சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் வந்து கொண்டிருப்பதால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது’’ என்றார்.
உத்தரப் பிரதேசத்திலும் கடந்த இரு தினங்களில் மட்டும் மின்னல் தாக்கி 20 பேர் உயிரிழந்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.