இந்தியா

விளையாட்டுப் போட்டியில் வெற்றி காண மகளுக்கு ரூ.5 லட்சம் செலவில் துப்பாக்கி வாங்கிய ஆட்டோ ஓட்டுநர்

பிடிஐ

அகமதாபாத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், விளையாட்டு வீராங் கனையான தனது மகளுக்கு, ரூ. 5 லட்சம் மதிப்புள்ள ஜெர்மன் துப்பாக்கியை பரிசாக வாங்கிக் கொடுத்துள்ளார்.

மணிலால் கோஹில் (50) என்ற அந்த ஆட்டோ ஓட்டுநர், தனது மகள் மிட்டலின் திருமணத்துக்காக சேமித்து வைத்திருந்த பெருந் தொகையை, ஜெர்மன் நாட்டு தயாரிப்பில் உருவான, ரூ.5 லட்சம் மதிப்பிலான துப்பாக்கியை வாங்க செலவிட்டுள்ளார்.

துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தேசிய அளவிலான வீராங்கனை யாக உள்ள மிட்டல், சர்வதேச போட்டிகளிலும் பதக்கங்களை வென்று, இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதற்காக இச் செயலை செய்யத் துணிந்ததாக மணிலால் கூறினார்.

தற்போது, 27 வயதான மிட்டல் 2012-ம் ஆண்டு முதல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்று வருகிறார். 2013-ம் ஆண்டு நடை பெற்ற 57-வது அகில இந்திய தேசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டி யில் இவரின் அணி பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்றது.

மாநில, மாவட்ட அளவிலான போட்டிகளில் தங்கமும் வென் றுள்ளார். ரைஃபிள் கிளப் சார்பில் வழங்கப்பட்ட இந்திய தயாரிப்பு துப்பாக்கி ஒன்றையே இதுவரை அவர் பயன்படுத்தி வந்தார்.

கடந்தமுறை போட்டிக்கு முன் பாக, கடைசி நேரத்தில் துப்பாக்கி பழுதாகிவிட்டது. சக வீராங்கனை யின் துப்பாக்கியை இரவல் வாங்கிப் பயன்படுத்தி, வெண் கலப் பதக்கம் வென்றுள்ளார்.

இதைக் கண்ட மணிலால், மிட்டலின் திருமணத்துக்காக சேமித்த தொகையை பயன் படுத்தி, உயர் ரக ஜெர்மன் துப்பாக்கியை வாங்கி அவருக்கு பரிசாக வழங்கியுள்ளார்.

இதுகுறித்து மணிலால் கூறும் போது, ‘மற்ற எல்லா தந்தையை யும் போலவே, நானும் மகளின் திருமணத்துக்காக பணம் சேர்த்து வைத்தேன். அதேசமயம், ஒரு நல்ல துப்பாக்கி இருந்தால் மிட்டல் இன்னும் பல போட்டிகளை வெல்வார் என உணர்ந்தேன். ஒரு தந்தை என்ற முறையில், என் மகள் அவர் விரும்பியதை அடைய எந்த சிரமமும் இருக்கக் கூடாது என நினைத்து துணிச்சலாக இம்முடிவை எடுத்தேன்’ என்றார்.

அகமதாபாத்தின் கோம்திபூர் பகுதியில் 2 மகன்கள், மகள் மிட்டல் உள்ளிட்ட குடும்பத்தாருடன் ஒண்டிக்குடித்தனம் நடத்திவரும் மணிலால் ஆட்டோ ஓட்டுவதன் மூலம், தினசரி ரூ. 500 சம்பாதிக்கிறார்.

கடந்தமுறை போட்டிக்கு முன்பாக, கடைசி நேரத்தில் துப்பாக்கி பழுதாகிவிட்டது. சக வீராங்கனையின் துப்பாக்கியை இரவல் வாங்கிப் பயன்படுத்தி, வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

SCROLL FOR NEXT