பஞ்சாப் விமானப்படை தளத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில், முன்னாள் வெளியுறவு செயலாளர்கள் மற்றும் பாகிஸ் தானுக்கான முன்னாள் இந்திய தூதர் கள் உள்ளிட்டோருடன் மத்திய அரசு நேற்று ஆலோசனை நடத்தியது.
பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தளத்தில் நேற்று முன்தினம் அதிகாலையில் தீவிர வாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தி னர். இதற்கு பாதுகாப்புப் படை யினர் பதில் தாக்குதல் நடத்தினர். நேற்றுவரை இரு தரப்புக்கும் இடையே இந்தத் தாக்குதல் நீடித் தது. இந்தத் தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பே காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில், எஸ்.கே.லம்பா, ஜி.பார்த்தசாரதி, ஷ்யாம் சரண், சிவசங்கர் மேனன், சத்யவிரத பால், சரத் சபர்வால் மற்றும் டிசிஏ ராகவன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேற்று ஆலோசனை நடத்தினார்.
எனினும், இந்த ஆலோசனை தொடர்பான விவரங்களை வெளி யுறவு அமைச்சகம் வெளியிட வில்லை. பாகிஸ்தானுடனான ராஜதந்திர உறவு குறித்து இந்த சந்திப்பின்போது ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.
இந்தியா, பாகிஸ்தான் இடையே மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தத் தாக்குதல் பேச்சுவார்த்தை முயற்சியை பாதிக்குமா என்பது குறித்து விவாதம் நடைபெற்று வந்த நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.