இந்தியா

மன்னிப்பை தவிர வேறு எதையும் ஏற்பதற்கில்லை: கமல்நாத்

செய்திப்பிரிவு

தேவயானி விவகாரத்தில் அமெரிக்காவிடம் இருந்து மன்னிப்பை தவிர வேறு எதையும் ஏற்பதற்கில்லை என மத்திய அமைச்சர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.

இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே பொது இடத்தில் வைத்து கைவிலங்கிட்டு கைது செய்யப்பட்டதற்கு இந்தியா தொடர்ந்து தனது எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது.

இந்நிலையில் நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள அமெரிக்கா மன்னிப்பு கேட்க முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டது.

இதற்கிடையில் அமெரிக்கா மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என இந்திய அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கமல்நாத் கூறுகையில்: "சம்பிரதாயத்திற்காக அமெரிக்கா கூறும் விளக்கம் ஏதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இம்மாதிரியான விஷயங்களை இந்தியா ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது. இவ்விவகாரத்தில் அமெரிக்கா மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும். காலம் மாறி விட்டது, உலக மாற்றத்திற்கு ஏற்ப இந்தியாவும் மாறி விட்டது. இந்த மாற்றங்களை அமெரிக்கா புரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.

SCROLL FOR NEXT