பிரதமர் நரேந்திர மோடி நேற்று வாரணாசியில் பனாரஸ் இந்து கல்லூரியில் இருந்து ஊர்வலமாகச் சென்று வாக்கு சேகரித்தார். இதற்கு அவர் முறைப்படி அனுமதி பெறவில்லை என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் எழுத்துபூர்வமாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சம்பந்தப்பட்ட பாஜக தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.