காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழக அரசை சட்டப்படி சந்திக்க தயார் என கர்நாடக சட்டத் துறை அமைச்சர் ஜெயசந்திரா தெரிவித் துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் அண்மையில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் 19-ம் தேதி வரை தமிழகத்துக்கு 74.645 டிஎம்சி நீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும். ஆனால் நடப்பாண்டில் 24.593 டிஎம்சி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பாசனத்துக்கு நீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காவிரி பாசனப் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள 20 லட்சம் ஏக்கர் சம்பா பயிர்களை காப்பாற்ற மீதமுள்ள 50.052 டிஎம்சி நீரை கர்நாடகா உடனடியாக திறந்துவிட உத்தரவிட வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து கர்நாடக சட்டத் துறை அமைச்சர் ஜெயசந்திரா நேற்று கூறியதாவது:
கர்நாடகாவில் தற்போது பருவ மழை பொய்த்து வறட்சி நிலவு வதால் நடுவர் மன்ற இறுதி தீர்ப் பின்படி தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாத நிலையில் இருக் கிறோம். இந்த விவகாரத்தை எப்படி சட்டப்பூர்வமாக எதிர்கொள்வது என்பது குறித்தும் சட்ட நிபுணர் களுடன் தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். எனவே உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கை நிச்சயம் சட்டப்படி சந்திப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.