நாட்டின் பணக்கார பெண்மணியான சாவித்ரி ஜிண்டால், ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்தார்.
ஹிசார் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சாவித்ரி ஜிண்டால், பாஜக வேட்பாளர் கமல் குப்தாவிடம் 13,646 வாக்கு கள் வித்தியாசத்தில் தோல்விய டைந்தார்.
சாவித்திரி ஜிண்டால் கடந்த 2005, 2009-ம் ஆண்டு தேர்தல் களில் தொடர்ந்து வெற்றி பெற்றவரா வார். தற்போது ஆட்சியை இழந் துள்ள பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான அரசில் அமைச்சராகப் பதவி வகித்தவர்.
பெரும் கோடீஸ்வரரான நவீன் ஜிண்டாலின் தாயான சாவித்ரி ஜிண்டால், ஓ.பி. ஜிண்டால் குழுமத்தின் தலைவராக உள்ளார். இந்தியாவின் பணக்கார பெண்மணி என 2008-ம் ஆண்டு போர்ப்ஸ் பத்திரிகை இவரைக் குறிப்பிட்டது. கடந்த அக்டோபர் மாதம் மீண்டும் இந்தியாவின் பணக்கார பெண்மணிகளில் முதலிடம் பிடித்தார்.
இவர் இந்தியாவின் 12-வது பெரும் பணக்காரராவர். இவரது குடும்பத்தின் நிகர சொத்து 39, 500 கோடி ரூபாயாகும்.