இந்தியா

கடந்த ஆண்டில் 5 இந்தியர் உட்பட 122 பத்திரிகையாளர்கள் கொலை: சர்வதேச பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு தகவல்

பிடிஐ

கடந்த ஆண்டில் 5 இந்தியர்கள் உட்பட 122 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாக ஒரு ஆய் வறிக்கை தெரிவிக்கிறது.

சர்வதேச பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு (ஐஎப்ஜே) தனது வருடாந்திர (2016) அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இது தொடர்பாக கூறியிருப்பதாவது:

2016-ம் ஆண்டில் உலகம் முழுவதும் 122 பத்திரிகை யாளர்கள் உயிரிழந்தனர். இதில் கொலை, வெடிகுண்டு தாக்குதல் உட்பட திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 93. இது 2015-ம் ஆண்டின் 112-ஐ விட குறைவு.

மற்ற 29 பேர் இயற்கைப் பேரிடர் மற்றும் விபத்து உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்தனர். இதில் 20 பேர் விமான விபத்தில் பலியாயினர். பிரேசில் நாட்டைச் சேர்ந்த விளையாட்டுத் துறை பத்திரிகையாளர்களான இவர்கள் சென்ற விமானம் கொலம்பியாவின் மெடலின் நகரில் வெடித்துச் சிதறியது குறிப்பிடத்தக்கது.

படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள், ஆப்ரிக்கா, ஆசியா பசிபிக், அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் அரபு ஆகிய பிராந்தியங்களைச் சேர்ந்த 23 நாடுகளைச் சேர்ந்த வர்கள் ஆவர்.

இதில் அதிகபட்சமாக இராக்கில் 15 பேரும் ஆப்கானிஸ் தானில் 13 பேரும் மெக்சிகோவில் 11 பேரும் பலியாயினர். ஏமன் (8), கவுதமாலா (6), சிரியா (6), இந்தியா மற்றும் பாகிஸ்தான் (தலா 5) ஆகிய நாடுகள் அடுத் தடுத்த இடங்களைப் பிடித்தன. 2015-ல் இந்தியாவில் 6 பத்திரிகை யாளர்கள் கொல்லப்பட்டனர்.

பலியானவர்களில் தருண் மிஸ்ரா (ஜன் சந்தேஷ் டைம்ஸ்), இந்திரதேவ் யாதவ் (தாஸா டிவி), ராஜ்தியோ ரஞ்சன் (டெய்னிக் ஹிந்துஸ்தான்) கிஷோர் தவே (ஜெய் ஹிந்த்) மற்றும் தர்மேந்திரா சிங் (டெய்னிக் பாஸ்கர்) ஆகிய 5 பேர் இந்தியர்கள் ஆவர்.

2015-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2016-ல் பத்திரிகையாளர்கள் படுகொலை சற்று குறைந்துள்ள போதிலும், பத்திரிகையாளர் களின் உயிருக்கு அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, பத்திரிகை சுதந்திரம் இன்னமும் கேள்விக்குறியாகவே உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT