ஜார்க்கண்ட் மாநிலத்தில் லாரி மோதிய விபத்தில் 4 குழந்தைகள் உயிரிழந்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் பலமாவ் மாவட்டம், பத்ரா என்ற இடத்தில் கருங்கற்களை ஜல்லிகளாக உடைக்கும் கிரஷர் ஆலை உள்ளது. தொழிலாளர்களின் குழந்தைகள் நேற்று முன்தினம் இரவு ஆலை வளாகத்தில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது லாரி சக்கரங்கள் ஏறி 4 குழந்தைகள் உயிரிழந்தனர்.
சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், லாரியை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய அதன் டிரைவரை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இந்திரஜீத் மகதா கூறும்போது, “ஆலை வளாகத்தில் தொழிலாளர்களின் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டது எப்படி என்பது குறித்து விசாரித்து வருகிறோம். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு விதிகளின்படி இழப்பீடு வழங்கப்படும்” என்றார்.