ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் ராணுவ அதிகாரி ஒருவரும் எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர் ஒருவரும் பலியாகினர்.
இது தொடர்பாக ராணுவ அதிகாரி ஒருவர், "இன்று (திங்கள்கிழமை) காலை 8.30 மணியளவில் பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணகாட்டி பகுதியில் அமைந்துள்ள இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. ராக்கெட்டுகள், தானியங்கி ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் ராணுவத்தின் இளநிலை அதிகாரி ஒருவரும் எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த தலைமைக் காவலர் ஒருவரும் பலியாகினர். மற்றொரு வீரர் கயாமடைந்தார்" எனத் தெரிவித்தார்.
கடந்த மாதத்தில் பூஞ்ச், ரஜோரி மாவட்டங்களில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் 7 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.