இந்தியா

வானொலியில் மக்களுடன் தொடர்ந்து பேசுவேன்: மோடி

ஐஏஎன்எஸ்

நாட்டு மக்களுடன் இனி அவ்வப்போது வானொலியில் பேச இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணியளவில் உரை நிகழ்த்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஆல் இந்தியா ரேடியோ பன்பலையில் முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்காக உரையாற்றினார். அப்போது அவர் தேசத்தின் வளர்ச்சியில் அனைத்து மக்களும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

நாட்டு மக்களுடன் இனி அவ்வப்போது வானொலியில் பேச இருப்பதாக தெரிவித்த அவர், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணியளவில் உரை நிகழ்த்தப்படும் என தெரிவித்துள்ளார்.

தான் துவங்கி வைத்த 'தூய்மை இந்தியா' திட்டத்தில் ஒவ்வொரு இந்தியரும் பங்கேற்க வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT