பார்மா துறையில் அன்னிய முதலீட்டு வரம்பைக் குறைக்க முடியாது என்று வர்த்தக அமைச்சர் ஆனந்த சர்மா தெரிவித்திருக்கிறார்.
தற்போதைக்கு பார்மா துறையில் 100 சதவிகித அன்னிய முதலீடு அனுமதிக்கப்படுகிறது. இந்த முடிவு வியாழக்கிழமை எடுக்கப்பட்டது.
தொழில் முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (டிஐபிபி) பார்மா துறையில் அன்னிய முதலீட்டு வரம்பை 49 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என்று கேட்டிருந்தது. ஆனால் மத்திய நிதி அமைச்சகம் இந்த விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டது.
இந்திய பார்மா நிறுவனங்களை பன்னாட்டு நிறுவனங்கள் கையப்படுத்துவதை தடுப்பதற்காகதான் தொழில் முதலீட்டு மேம்பாட்டு வாரியம் இந்த கோரிக்கையை மத்திய அரசிடம் கேட்டிருந்தது குறிப்பிடதக்கது.
நவம்பர் 2011 முதல் ஜூலை 2013 வரை 74 அன்னிய முதலீடுகளுக்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (எஃப்.ஐ.பி.பி) அனுமதி கொடுத்திருக்கிறது.
கடந்த 2012 ஏப்ரல் முதல் 2013 ஜூன் வரை இந்தியாவில் 200 கோடி டாலர்கள் அளவுக்கு அன்னிய முதலீடுகள் இந்தியாவுக்கு வந்திருக்கிறது. இதில் 95 சதவிகித தொகை பார்மா துறை மூலமாகதான் வந்துள்ளது.