இந்தியா

ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு தொடரும்- சோனியா காந்தி அறிவிப்பு

செய்திப்பிரிவு

ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு தொடரும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார்.

ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜனார்தன துவிவேதி கருத்து கூறியதால் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து சோனியா இவ்வாறு கூறியுள்ளார்.

இதுகுறித்து சோனியா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “எஸ்சி, எஸ்டியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அதிகாரம் பெறச் செய்வது காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை. தற்போதுள்ள இடஒதுக்கீடு முறையில் காங்கிரஸ் நிலைப்பாடு தொடர்பாக எவ்வித சந்தேகமும் வேண்டாம். இடஒதுக்கீட்டை அமல்படுத்தியது காங்கிரஸ் கட்சி. அதை வலுப்படுத்தியும் காங்கிரஸ் கட்சி. எனவே தற்போதுள்ள இடஒதுக்கீட்டை காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தும்” என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT