இந்தியா

டெல்லியில் கள்ள நோட்டுகள் அச்சடித்த கும்பல் கைது

செய்திப்பிரிவு

டெல்லியில் புதிய ரூ2000, ரூ.500 கள்ள நோட்டுகளை அச்சடித்த கும்பலை போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து துணை போலீஸ் கமிஷ்னர் சுரேந்தர் குமார் கூறும்போது, "புதிதாக வெளியிடப்பட்ட 2,000, 500 ரூபாய் நோட்டுகளை போலியாக அச்சடித்து சந்தையில் புழக்கத்தில்விட ஒரு கும்பல் முயற்சித்து வருவதாக தகவல் வெளியானது. இதனையடுத்து அவர்களை போலீஸார் தீவிரமாக கண்காணித்து சுற்றிவளைத்தனர். அவர்களிடமிருந்து 6.5 லட்ச மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதவிர 20,000 மதிப்புள்ள கள்ள நோட்டுகள் உள்ளூர் சந்தையில் புழகத்தில் விடப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்களில் முக்கிய குற்றவாளியான கிஷன் டெஸ்க்டாப் பப்ளிஷிங் நிபுணர் ஆவர்" என்று கூறினார்.

SCROLL FOR NEXT