இந்தியா

கோடை விடுமுறையால் திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

என்.மகேஷ் குமார்

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நாளில் இருந்து திருமலை திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நாள்தோறும் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். எனவே பக்தர்கள் வசதிக்காக ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் சிபாரிசு கடித தரிசனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து கூட்டம் அதிகரித்து வருவதால் நேற்று சர்வ தரிசனம் மூலம் ஏழுமலையானைத் தரிசிக்க 10 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்தனர்.

இதேபோல் ரூ.300 சிறப்பு தரிசனத்துக்காக 5 மணி நேரமும், பாத யாத்திரையாக வந்த பக்தர்கள் 7 மணி நேரமும் காத்திருந்தனர். அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் குடிநீர், மோர், இலவச சிற்றுண்டி ஆகியவை வழங்கப்பட்டது.

.

SCROLL FOR NEXT