இந்தியா

இந்திய எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் கைது

செய்திப்பிரிவு

இந்திய எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து, போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், முகமது அக்மல் (25) என்ற இளைஞர் ஜம்மு காஷமீர் ஆர்.எஸ்.புரா பகுதி வழியாக இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றார்.

அப்போது எல்லைப் பாதுகாப்புப் படையினர் அவரை கைது செய்தனர். அவரை சோதனை செய்த போது எந்த விதமான ஆயுதங்களும் அவரிடம் இல்லை என தெரிய வந்துள்ளது. இருப்பினும், அவர் ஊடுருவ முயன்றது ஏன் என விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

SCROLL FOR NEXT