பொதுத்துறை நிறுவனமான கிரிஷக் பாரதி கூட்டுறவு நிறுவனத்துடன் (கிரிப்கோ) கூட்டு வர்த்தகத்தில் இறங்க உதவியதற்காக மத்திய அரசு அதிகாரிக்கும் அவரது மகனுக்கும் நார்வே நாட்டைச் சேர்ந்த நிறுவனம் சுமார் 6 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கியதாக நார்வே புலானாய்வுத்துறை தெரி வித்துள்ளது.
இது தொடர்பாக ‘தி இந்து’வுக்கு கிடைத்த ஆவணத்தில் இந்த தகவல்கள் உள்ளன. இந்த 10 லட்சம் டாலர் தொகை யானது, வரி விதிப்பு உள்ளிட்ட கெடுபிடி களிலிருந்து தப்பிக்க வெளிநாட்டில் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்கில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது.
குர்பிரிதேஷ் சிங் மைனி, அவரது தந்தை ஜிவ்தேஷ் சிங் மைனி (நிதி அமைச்சக கூடுதல் செயலர் மற்றும் கிரிப்கோ போர்டு உறுப்பினர்), பெயரில் இந்த வங்கி்க் கணக்கு உள்ளது.
நார்வே பொருளாதார. சுற்றுச் சூழல் குற்ற புலனாய்வு தேசிய ஆணை யம் (ஒகாக்ரிம்) இந்த முறைகேடு விவ காரத்தை அம்பலப்படுத்தியுள்ளது.
உலகிலேயே மிகப் பெரிய உர நிறுவனம் யரா. நார்வேயில் உள்ள இந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள கிரிப்கோவுடன் கூட்டு வர்த்தக முயற்சியில் இறங்க லஞ்சம் வழங்கியதற்காக 4.83 கோடி டாலர் (ரூ. 285 கோடி) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த கூட்டு வர்த்தகத் திட்டம் ஈடேறாமல் தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
இது தவறு என ஒப்புக் கொண்டதும் அபராதத்தை ஏற்றுக் கொண்டதும் நிறுவன அளவில் நாங்கள் நடத்திய விசாரணையும் நார்வே புலனாய்வு நிறுவனம் கண்டறிந்ததும் ஒன்றுபோலத்தான் என்பதை பிரதிபலிக்கிறது என்று யரா இன்டர்நேஷனல் நிறுவன போர்டு தலைவர் தெரிவித்தார்.
அபராதம் மிகக் கடுமையாக இருந்த போதிலும் நாங்கள் அதை ஏற்கிறோம் என்று புணேயில் உள்ள யரா நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆனால் மேற்கொண்டு விவரம் தர அவர் முன்வரவில்லை. நார்வே புலனாய்வு அமைப் பான ஒகாக்ரிம் வெளியிட்ட அபராத அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு:
யரா நிறுவனத்தின் சார்பில் அதன் நிர்வாக குழு உறுப்பினர்கள் 2007 ஏப்ரலில் ஜிவ்தேஷ் சிங் மைனியின் மகன் குர்பிரிதேஷ் சிங் மைனியுடன் பேரம் பேச முன்வந்தனர். அப்போது ஜிவ்தேஷ் சிங் உர அமைச்சகத்தில் கூடுதல் செயலராகவும் நிதித்துறை ஆலோசகராகவும் கிரிப்கோ போர்டில் உறுப்பினராகவும் இருந்தார்.
ஜிவ்தேஷ் சிங் மைனி வகிக்கும் பொறுப்பின் காரணமாகவே குர்பிரிதேஷ் சிங் மைனியிடம் பேரம் நடத்த யரா நிறுவனத்தினர் முன் வந்துள்ளனர் என அபராத அறிக்கை தெரிவிக்கிறது.
கிரிப்கோவுடன் கூட்டு வர்த்தக திட்டத்துக்கு ஒப்புதல் பெற்றுத் தந்தால் குர்பிரிதேஷ் சிங்குக்கு 30 லட்சம் டாலர் தருவது என பேரத்தில் முடிவானது. 2007 ஜனவரி 1 லிருந்து 2009 டிசம்பர் 31-க்குள் இந்த பணத்தை பல தவணைகளில் வழங்குவது எனவும் முடிவானது.
கிரிஸ்டல் ஹோல்டிங்ஸ் அண்ட் இன்வெஸ்ட் மென்ட்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தின் பெய ரில் ஹாங்காங்கில் உள்ள வங்கிக் கணக்குக்கு 10 லட்சம் டாலரை யரா மாற்றியது. கிரிஸ்டல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தில் ஆதாயம் பெறும் உரிமையாளர்களாக உள்ளவர்கள் ஜிவ்தேஷ் சிங் மைனி மற்றும் குர்பிரிதேஷ் சிங் மைனியின் மனைவிகள் ஆவர்.
விளக்கம் கேட்டு செல்போனில் அழைப்பு விடுத்தபோதும் ஜிவ் தேஷ் சிங்கிட மிருந்து பதில் கிடைக்க வில்லை. ஜிவ்தேஷ், குர்பிரிதேஷ் இருவருக் கும் கிடைத்த பணம், பதவி நீக்கம் செய்யப்பட்ட லிபிய சர்வாதிகாரி முயம் மர் கடாபியின் அரசில் இடம் பெற்ற பெட்ரோலியத் துறை அமைச் சர் ஷுக்ரி கானிம் மற்றும் ரஷிய நிறுவனம் ஒன்றின் தலைவர் வாசிலி லோனாவ் ஆகியோருக்கு பலன் கொடுத்த சட்ட விரோத வர்த்தக நடவடிக்கைகளின் ஒரு பகுதி என நார்வே புலனாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.