காஷ்மீர் செல்லும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு பேச்சு வார்த்தைக்கு ஹுரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர் சையத் அலி கிலானி எதிர்ப்புத் தெரிவித் துள்ளார்.
“காஷ்மீர் சிக்கலை மக்கள் பிரதி நிதிகள் புரிந்துகொள்ளவில்லை. இதுபோன்ற பேச்சுவார்த்தை அர்த்தமற்றது. எனவே, பேச்சு வார்த்தையில் எந்த தரப்பினரும் பங்கேற்க வேண்டாம்” என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் 28 பேர் கொண்ட அனைத்துக் கட்சி பிரதி நிதிகள் குழு 2 நாள் பயணமாக நாளை காஷ்மீர் செல்கிறது.
பாக். அத்துமீறல்
ஜம்மு மாவட்டம் அக்னூர் பகுதியில் கட்டுபாட்டு எல்லைக் கோடு அருகே உள்ள இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் நேற்று அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டது. சிறிய ரக ஆயுதங்கள் மூலம் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்திய வீரர்கள் உரிய பதில் தாக்குதல் நடத்தியதாக ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை வரை தாக்குதல் தொடர்ந்தது. எனினும், இந்திய தரப்பில் சேதம் ஏதும் ஏற்பட வில்லை.