ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தின் வழியாக இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளின் முயற்சி முறியடிக்கப்பட்டது. அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இன்று அதிகாலையில், சம்பா மாவட்டத்தில் சர்வதேச எல்லைப் பகுதியில், சந்தேகத்திற்கு இடமான நடமாட்டம் இருப்பதை எல்லை பாதுகாப்புப் படையினர் கண்டறிந்தனர்.
இதனையடுத்து, எல்லை பாதுகாப்புப் படையின் 9-வது பட்டாலியனைச் சேர்ந்த வீரர்கள் கடும் தாக்குதலில் ஈடுபட்டனர். பல மணி நேரம் நீடித்த தாக்குதலில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அண்மையில், இந்திய எல்லையில் கெரான் பகுதி வழியாக ஊடுருவ முயன்ற 30க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளின் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.